இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வெகு வேகமாக அதிகரித்து வருகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் மக்கள் அதிக அளவில் ரெயில் நிலையத்திற்கு வருவதை தவிர்க்கும் வகையில் நடைமேடை கட்டணம் ரூ. 50 ஆக உயர்த்தப்படுவதாக தென்னக ரெயில்வே இன்று அறிவித்துள்ளது.
10 ரூபாயில் இருந்து 50 ரூபாயாக நடைமேடை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. கட்டண உயர்வு நாளை முதல் அமலுக்கு வருகிறது. இது மார்ச் 31ம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது