முன்னாள் எம்.எல்.ஏ மனோகர் கோரிக்கை

முன்னாள் எம்.எல்.ஏ மனோகர் கோரிக்கை


புதுச்சேரி மாநில காங்கிரஸ் ஆட்சியில் ஆரம்பத்திலிருந்தே எல்லாமே குழப்பம்தான் எதையும் சரியாக செய்வதில்லை சிகப்பு ரேஷன்கார்டு வைத்திருப்பவர்கள், மஞ்சள் ரேஷன் கார்டு வைத்திருபவர்களில் உண்மைத்தன்மையை இதுவரை இந்த அரசு சரிசெய்யவில்லை .
அதனால் சிகப்பு கார்டு வைத்திருப்பவர்களும் பாதிக்கப்படுகின்றனர், மஞ்சள் கார்டு வைத்திருப்பவர்களும் பாதிக்கப்படுகின்றனர் .
 அரசு சரியான கணக்கெடுப்பை நடத்துவதில்லை இதனால் புதுச்சேரி மாநிலத்தில் பல ஏழை மக்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர் .
எந்த  மக்கள் நலத்திட்டத்தையும் ஒழுங்காக செயல்படுத்தாமல் புதுச்சேரி மக்களை குழப்பி வருகிறது இந்த அரசு .
இந்த அரசு மக்களுக்கு ஒன்றை தெளிவுபடுத்தவேண்டும் புதுச்சேரியில் தற்போது உள்ள சிகப்பு ரேஷன் கார்டு, மஞ்சள் ரேஷன் கார்டுகள் அனைத்தும் சரியான கணக்கீடா என்பதை மக்களுக்கு சொல்லவேண்டும்.
மேலும் மிகவும் வருமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு சிகப்பு ரேஷன் கார்டு 
BPL (Below Poverty Line)
கொடுத்துள்ளீர்கள் .
இதுபோல்  இந்தியா முழுவதும் உள்ள சிகப்பு ரேஷன் கார்டுதாரர்களுக்கு மத்திய அரசு இலவச அரிசியை வழங்கியுள்ளது. 
நமது புதுவை அரசின் கணக்குபடி இவர்கள் மிகவும் ஏழ்மையாணவர்களாகும் இவர்களின் பசியை உடனடியாக போக்க இவர்களுக்கு மத்திய அரசிடம் இருந்து அரிசி வந்துள்ளது .
இதை இன்னும் காலத்தோடு புதுவை அரசு வழங்கவில்லை.
மேலும் மஞ்சள் கார்ட்டுக்கும் அரிசி கொடுப்போம் என்று சொல்கிறீர்கள் இதை நான் வரவேற்கிறேன் .
ஆனால் இவர்களுக்கு அரிசியை எப்படி எங்கிருந்து வாங்கி கொடுக்கப்போகிறீர்கள் என்பதையும் மக்களுக்கு சொல்லவேண்டும் .
மேலும் மத்திய அரசு தற்போது  கொடுத்துள்ள கொரோனா நிவாரன அரிசி என்பது சிவப்பு கார்டுக்கு என தனியானதாகும்.
நமது மாநிலத்தில் ஏற்கனவே 24 மாதங்களாக மக்களுக்கு அரசி போடவில்லை இதில் சிகப்பு கார்டு, மஞ்சள் கார்டு, இரண்டு கார்டுகளுக்கும் அரிசி கொடுக்கவேண்டும் .
தற்போது மஞ்சள் காட்டுக்கு அரிசி கொடுக்கப்படும் என்று சொல்கிறீர்கள் இது ஏற்கண புதுவை அரசிடம் நிலுவையில் உள்ள அரிசி பணமா? 
இல்லை 
மஞ்சள் கார்டுக்கு என தற்போது கொரோனா நிதி தனியாக ஒதுக்கி அதில் அரிசி வாங்கி கொடுக்கப்போகிறீர்களா? என்பதை மக்களுக்கு தெளிவுபடுத்தவேண்டியது புதுச்சேரி அரசின் கடமையாகும் .
இதை எப்படி செய்யப்போகிறீர்கள்?


மேலும் ஏற்கனவே புதுவை அரசில் நிலுவையில் உள்ள அரிசி பணத்தில் மஞ்சள் கார்டுக்கு மட்டும்  அரிசி வாங்கி வழங்கினால் இந்த காலத்திற்குண்டான சிகப்புக்கார்டுக்கு வழங்கவேண்டிய அரிசியையும் மக்களுக்கு வழங்கவேண்டும்.
மத்திய அரசு தற்போது கொடுத்துள்ள கொரோனா நிவாரண அரிசி என்பது தனி கணக்காகும் .
புதுச்சேரி அரசு ஏழை மக்களுக்கு காலத்தோடு அரிசியை வழங்கவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் .


செய்தியாளர் K . முரளி, புதுவை மாநிலம் . செல்- 9043704727, 8248483400.


" alt="" aria-hidden="true" />