சிவப்பு சிலந்திதாக்குதல் அதிகரிப்பு: தேயிலை வாரிய அறிவுரை அவசியம்

சிவப்பு சிலந்திதாக்குதல் அதிகரிப்பு: தேயிலை வாரிய அறிவுரை அவசியம்.


தின ஓசை செய்தி
ஊட்டி:காலநிலை மாற்றத்தால் தேயிலை செடிகளில் சிவப்பு சிலந்தி தாக்குதல் அதிகரித்துள்ளது.நீலகிரியில், 60 ஆயிரம் ஏக்கரில் தேயிலை சாகுபடி செய்யப்படுகிறது. தற்போது, கோடை மழை அவ்வப்போது பெய்து வருகிறது. வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வந்ததால், தேயிலை செடிகளில் மாறுபட்ட சீதோஷ்ண நிலை ஏற்பட்டது.இந்நிலையில், குந்தா, குன்னுார், கோத்தகிரி மற்றும் பந்தலுார் பகுதிகளில் வறண்ட கால நிலை நிலவும் பகுதிகளில் உள்ள தேயிலை செடிகளில் சிவப்பு சிலந்தி தாக்குதல் அதிகளவில் படர்ந்துள்ளது.ஒரு சில நாட்கள் பெய்த மழையாலும் வெப்பம் அதிகரித்து சிவப்பு சிலந்தி தாக்குதல் மேலும் அதிகரித்துள்ளது. மேற்கண்ட பகுதிகளில், 30 சதவீதம் அளவுக்கு இதன் தாக்கம் அதிகரித்துள்ளது.தேயிலை வாரிய அதிகாரிகள் கூறுகையில்,'ஆண்டுதோறும் மார்ச், ஏப்ரல் மாத கால நிலையில் தேயிலை செடிகளை சிவப்பு சிலந்தி தாக்கம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதை தடுக்க, விவசாயிகள் தற்போதைய சூழலில் அடி கவாத்து மிகவும் அவசியம். தேயிலை வாரியம் அறிவுரைகளை தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும்,' என்றனர்.


நீலகிரி மாவட்ட நிருபர் ஆர்.சூரஜ்  8508063861.


" alt="" aria-hidden="true" />