ஏழைக்கு உதவுபவன் கையைத் தட்டிவிடுகிறது.. தமிழக அரசை கடுமையாக விமர்சனம் செய்த கமல்ஹாசன்!
சென்னை: அரசு ஏழைக்கு உதவுபவன் கையைத் தட்டிவிடுகிறது என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தமிழக அதிமுக அரசை விமர்சனம் செய்துள்ளார்.
கொரோனா காரணமாக மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் அரசியல் கட்சிகள் மற்றும் என்ஜிஓ அமைப்புகள் மக்களுக்கு உதவி செய்ய கூடாது என்று தமிழக அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது. மக்கள் தனிமனித விலகலை கடைப்பிடிக்க வேண்டும். அதனால் அரசியல் கட்சிகள் மக்களுக்கு உதவி செய்ய கூடாது என்று அரசு கூறியுள்ளது.
மக்கள் தனிமனித விலகலை கடைபிடிக்க வேண்டும் என்பதற்காகத்தான் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனால் அரசியல் தலைவர்கள் யாரும் வெளியே வர கூடாது. அரசியல் தலைவர்கள் மக்களுக்கு உதவ வேண்டும் என்றால் மாவட்ட ஆட்சியாளர்களிடம் மருந்துகளை கொடுக்கலாம்.
டெல்லி மாநாட்டில் கலந்து கொண்ட தமிழர்.. டெல்லி மருத்துவமனையில் பலி.. கலங்கடிக்கும் பாச போராட்டம்!
மாவட்ட ஆட்சியாளர்கள் மூலம் அவர்கள் மக்களுக்கு உதவலாம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் இதற்கு திமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தற்போது மக்கள் நீதி மய்யம் தலைவர்கள் கமல்ஹாசன் இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார்.
அதில், அண்டை மாநிலங்கள் சிலர் கொரோனாவிற்கு எதிராக போராட தனியார்,இளைஞர்,ஓய்வு பெற்ற மருத்துவர் எனப்பலரின் உதவியை நாடிப்பெறுகின்றனர். என் அரசு ஏழைக்கு உதவுபவன் கையைத்தட்டிவிடுகிறது. வேலைதெரிந்த நம் ஆட்சியரை வேலை செய்ய விடும் அமைச்சர்காள். இது கமிஷனுக்கான நேரம் கிடையாது.. மக்கள் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள், என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் விமர்சனம் செய்துள்ளார்.
" alt="" aria-hidden="true" />